Latestமலேசியா

கடன் தொல்லை: போலீஸ்காரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

சிபு, ஜூன் 20 – லான்ஸ் கார்ப்பரலான பெஞ்சாமின் சாகாகான் ஞாலிபான் (48 வயது)  தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிந்துலு போலீஸ் நிலையத்தில் 12.05 காலையில் இருந்து காலை 8 மணிக்குமான ஷிப்டுக்குப் நான்கு போலீசார் பதிவு செய்து, துப்பாக்கியைப் பெறும்போது, பெஞ்சாமின் தமது துப்பாக்கியைச் சக போலீஸ்காரருக்கு எதிரே நீட்டிய பின்னர், தமது கன்னத்திற்குக் கீழே வைத்துச் சுட்டுக் கொண்டுள்ளார்.

விசாரணையில், நிதிப் பிரச்சினையின் காரணமாக ஒரு நாளைக்கு முன்னர், அவருக்கும் மனைவிக்கும் கடும் வாக்குவாதம் நிகழ்ந்ததாக சூப்ரிடெண்டன் ஷுல்ப்லி தெரிவித்தார். அவரது மனைவியும் (வயது 43) அதே போலீஸ் நிலையத்தில் கார்ப்பரலாக பணியாற்றுகிறார்.

2007  ஜனவரி 1லிருந்து பணியாற்றி வரும் அவருக்குக் கட்டொழுங்குப் பிரச்சினைகள் உள்ளன. 2012இல் போக்குவரத்துக் குற்றம் சுமத்தப்பட்டு அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

2008 ஆகஸ்டில் வனவிலங்கு குற்றச்சாட்டில் 500 ரிங்கிட் அல்லது 6 மாதச் சிறைத் தண்டனை  9இல் விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு ஜனவரி 28இல் மீண்டும் வேலையில் சேர்ந்துள்ளார். அவருக்கு 2018 ஆகஸ்டு 16, 17ஆம் தேதிகளில் மனநல ஆலோசனை தரப்பட்டிருந்தது. இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப் பட்டு விசாரணை செய்யப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker