Latestமலேசியா

கைரியின் புதிய பாதை: மையவாத சிந்தனைக் குழுவை உருவாக்கி இருக்கிறார்!

கோலாலம்பூர்ஜூன். 20- பல்வேறு முனைகளில் இருந்து கருத்துக்கள் வந்தாலும் மையவாத கருத்துக்களுக்காக ஒரு புதிய சிந்தனைக் குழுவை உருவாக்கியிருப்பதாக முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் அறிவித்திருக்கிறார்.

‘தி செண்டர்’ என்று அழைக்கப்படும் இந்த மையவாத கருத்து மையம், ஜூலை மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரெம்பாவ் தொகுதி எம்பியுமான கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

மக்கள் சார்ந்த விவலரங்களில், கோட்பாடுகளில் முற்றிலும் எதிரெதிரான உரத்த கருத்துக்களை எதிர்கொண்டு விவாதிப்பதற்கு தி செண்டர் என்ற இந்த அரசியல் மையவாத அமைப்பில் ஒரு வழிமுறையை விரிவுபடுத்தும் நோக்கில் தான் இந்த அமைப்பைத் தொடங்கி இருப்பதாகவும் தம்மோடு சேர்ந்து அம்னோ இளைஞர் துணைத்த லைவர் ஷாரில் ஹம்டானும் ம் இணைந்து செயல்படுவதாகவும் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

பொது மக்கள் சார்ந்த கொள்கைகளில் ஆதாரங்களின் அடிப்படையிலான -நியாயமான -நடுநிலையான- புதுமையான- வகையில் சிந்தனைகளை முன் வைக்க நாங்கள் விரும்புகிறோம். இதில் மாநிலங்களுக்கும் இன்றைய சந்தை போக்குகளுக்கும் ஒரு பங்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பட்ட்டதாரியான கைரி ஜமலுடின், அம்னோவின் முன்னாள் இளைஞர் தலைவராகவும், இளைஞர், விளையாட்டு துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். அதேவேளையில் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்லுரியில் படித்தவரான ஷாரில் ஹம்டான், தற்போது பொருளாதார திட்ட முதலீட்டு நிதி ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker