Latestமலேசியா

செக்ஸ் வீடியோ அரசியல் நோக்கம் கொண்டது; அஸ்மின் விடுமுறையில் செல்ல அவசியம் இல்லை – மகாதீர் !

புத்ரா ஜெயா, ஜூன்.20- பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்தி ஒரின சேர்க்கை உறவு வீடியோ காணொளி பரப்பி விடப்பட்டதில் அரசியல் நோக்கம் உள்ளது. எனவே அவர் விடுமுறையில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் துன் மகாதீர் கருத்துரைத்தார்.

இச்சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணை நடத்துகின்ற வேளையில் அஸ்மின் அலி அமைச்சர் பொறுப்பில் பணியாற்றுவதில் எவ்வித தடையும் இல்லை. குற்றச் செயல் குறித்த விசாரணை மேற்கொண்டால் விடுமுறையில் செல்வதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இக்காணொளியில் அமைச்சரை சம்பந்தப்படுத்தியதற்கு அரசியல் நோக்கம் உள்ளது போல் தெரிகின்றது. அவரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்து அவமானப்படுத்தவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இவ்விவகாரத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இது குறித்து எனக்கு எந்தவொறு தகவலும் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என இன்று பிரதமர் துறை இலாகாவின் நோன்பு பெருநாள் உபசரிப்பில் கலந்துக் கொண்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பில் பிகேஆர் கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்படுள்ளது. பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவராக இது தொடர்பில் உங்கள் நிலைபாடு என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த துன் மகாதீர், இவ்விவகாரத்தை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து நன் முடிவு ஏதும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker