Latestசினிமா

ஜூலை 14 இல் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் 

சென்னை,ஜூன்.20- தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக விக்ரமன், பொதுச்செயலாளராக ஆர்கே செல்வமணியும் பொருளாளராக பேரரசும் தற்போது பதவி வகித்து வருகின்றனர்.2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெ டுக்கப்படுவார்.

அந்த வகையில் 2019 -2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற ஜூலை 14ஆம் தேதி நடக்கிறது.சங்கத்தின் தலைவராக கடந்த 10ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தற்போது பொறுப்பில் உள்ளவர்களை மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வருகிற 27-ஆம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker