Latestமலேசியா

“திட்டுவார்களோ” என பயந்து கடத்தியதாக சிறுவன் சொன்ன பொய் அம்பலம்!

கோலத் திரெங்கானு, ஜூன் 20- வீட்டிற்கு தாமதமாக வந்ததால் திட்டுவார்களோ என பயந்த 12 வயது சிறுவன் ஒருவன் தன்னை ஒரு கும்பல்  கடத்த முயற்சித்ததாக  தன் தாயிடம் பொய்யுரைத்து உள்ளான்.

கடந்த செவ்வாய் கிழமையன்று கம்போங் ஜம்பு போங்கோ மாராங் எனும் இடத்தில் நடந்த அச்சம்பவத்தில் , காற்பந்து விளையாட  சென்ற தன்னை வெள்ளை நிற “வேன்” ஒன்றில் கடத்த முயன்றதாக அச்சிறுவன்  கூறியுள்ளான்.

மேலும் ஏறக்குறைய  7 மணியளவில்  வீட்டிற்கு திரும்பும் வேளையில், MBJ 4757 எனும் வாகன பதிவேட்டை கொண்ட அந்த வெள்ளை நிற “வேன்” தன்னை நெருங்கி யாரோ தன்னை உள் இழுத்தாக  சம்பந்தப்பட்ட அச்சிறுவன் குறிப்பிட்டான்.

இருப்பினும் தான் “போராடி தப்பித்து ஓடி”,  ஆளில்லாத வீட்டின் ஒன்றின் பின் சென்றுப்  பதுங்கியதாக அவன் தன் தாயிடம் குறிப்பிட்டுள்ளான். அதனை தொடர்ந்து, அச்சிறுவனின் தாயார் அருகில் இருக்கும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

திரெங்கானு போலீஸ் துணை ஆணையர் டத்தோக் அலாவுதின் அப்துல் மஜித் குறிப்பிடுகையில் அந்த சிறுவன் தெரிவித்தபடி அப்படிப்பட்ட சம்பவம் ஏதும்   நடக்கவில்லை என்றார்.

இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, அம்மாதிரியான எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை. இஎனினும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்போதுமே கண்காணிக்க வேண்டும்  என அவர் தெளிவுப்படுத்தினார்.  அதோடு இம்மாதிரியான பொய்யான தகவல்களை ஒருபோதும் நம்பி, பரப்ப வேண்டாம் , என்று பொது மக்களை அவர் வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker