Latestமலேசியா

நச்சு உணவு – 394 மாணவர்கள் பாதிப்பு

ஷா ஆலம், ஜூன் 10 – சிலாங்கூர் இஸ்லாமிய பல்கலைக்கழகக் கல்லூரியின் மாணவர்கள் நச்சு உணவை உட்கொண்டு உடல்நலம் கெட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரீதமானது அந்தக் கல்லூரியின் புது மாணவர்களுக்கான அறிமுக வாரத்தின் 4ஆவது நாளில் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 234 மாணவர்கள் 3 அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டதோடு மற்றவர்களுக்கு மருத்துவ சோதனையும் செய்யப்பட்டதாக சிலாங்கூர் சுகாதார இயக்குநர் டாக்டர் காலிட் இப்ராஹிம் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் தேறி வருவதாகவும் யாரும் மருத்துமனையில் தங்கியிருந்து சிகிச்சை அளிக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் உணவை உட்கொள்வதற்கு முன்னர், அதனைச் சோதித்துப் பார்த்து உண்ண வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதற்கு முன்னர், காஜாங் பண்டார் ஶ்ரீபுத்ரா பல்கலைக் கல்லூரியின் 110 மாணவர்கள் நச்சு உணவை உட்கொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker