Latestமலேசியா

நாசி லெமாக் கடை மீது வாகனம் மோதி மாது மரணம்! ஜி.ரவி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பட்டர்வெர்த், ஜூன்.20- கடந்த ஞயிற்றுக்கிழமை காலை கப்பாளா பாத்தாஸ் ஜாலான் பெர்தாம் இண்டாவில் நாசி லெமாக் அங்காடி கடையை வாகனத்தை மோதி ரொஸ் லிண்டா முகமட் ஈசா எனும் மாதுவிற்கு (வயது 44) மரணம் விளைவித்ததாக ஜி.ரவி (வயது 30) இன்று இங்குள்ள மாஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட்டார்.

மாஜிஸ்திரெட் நீதிபதி கலையரசி முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டதை அடுத்து அந்நபர் தனது குற்றத்தை மறுத்தார். இதனையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது, அப்படி வழங்கினாலும் அதன் தொகை 20,000 ரிங்கிட் வரை விதிக்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் முகமட் அம்ரீல் ஜொஹாரி வலியுறுத்தினார்.

ஆனால், ரவியின் மாத வருமானம் 1,200 வெள்ளி மட்டும் தான். அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் என கோரி குறைந்தபட்சம் ஜாமீன் கட்டணம் விதிக்க அவர் தரப்பு வழக்கறிஞர் முஹாய்மின் ஹாஷீம் கோரிக்கை முன் வைத்தார்.

இறுதியாக ரவிக்கு ஒருவரின் ஜாமீன் அடிப்படையில் 8,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை  நீதிபதி அறிவித்தார். மேலும் இன்று தொடங்கி மாதம் ஒருமுறை ரவி அருகில் உள்ள காவல் நிலையத்தில் கையொப்பமிட உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரணை வரும் ஜூலை 22ஆம் தேதியன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நீதிமன்றம் வந்திருந்த   அம்மாதின் குடும்பத்தினர், இக்குற்றத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். தற்பொழுது ரவி மீது 1987 சாலை போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 41(1) பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிருபிக்கப்பட்டால் அவருக்கு 3-இல் இருந்து 10 வருடங்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படுவதோடு 20,000 வெள்ளிக்கு குறைவாக அபராதமும் விதிக்கப்படும்
என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker