Latestமலேசியா

போதைப்பொருள்: மாட் சாபுவின் மகன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர், ஜூன் 20 – தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் புதல்வர் மீது போதைப் பொருள் குற்றம் சாட்டப்பட்டதை புக்கிட் அமான் உறுதிப்படுத்தியுள்ளது.

31 வயதான அகமட் சைஃபுல் இஸ்லாம் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியதாக புக்கிட் அமான் போதைப் பொருள் புலனாய்வு இலாகாவின் பொறுப்பு இயக்குநர் கமாருல் ஸமான் மாமாட் தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5,000 ரிங்கிட் அபராதமும் ஈராண்டு சிறையும் விதிக்கப்படலாம். கடந்த ஜூன் 13ஆம் தேதி அவர் குற்றம் சாட்டப்பட்டு 3,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டார். விசாரணை ஜூலையில் நடைபெறும்.

தமது மகன் மீது குற்றம் சுமத்தப் பட்டிருப்பதாகவும்,  சட்டத்தின் முன் அனைவரும் சமமே என முகமட் சாபு குறிப்பிட்டிருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker