Latestமலேசியா

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமைச்சர் வேதமூர்த்தி !

புத்ரா ஜெயா, ஜூன்.20- இன்று காலை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி 3 மணி நேர சிகிச்சைக்கு பின் இல்லம் திரும்பியதாக தகவல் கிடைத்துள்ளது.

மர்ம நோயினால் பாதிக்கப்பட்ட கிளாந்தான் குவா மூசாங் பகுதியில் உள்ள கம்போங் கோலக் கோ பகுதியில் சுமார் இரண்டு வார காலமாக தங்கியிருந்த பின் புத்ராஜெயாவிற்கு திரும்பிய அவருக்கு காய்ச்சல், வாந்திபேதி, சளி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சுமார் 3 மணி நேர சிகிச்சைக்கு பின் அவர் வீட்டிற்கு அனுப்பட்டார். இன்று முழுவதும் ஓய்வில் இருக்கும் அவர் நாளை மீண்டும் தமது பணியை தொடங்குவார் என வணக்கம் மலேசியாவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது

அமைச்சரின் இந்த திடீர் உடல் நலக் குறைவுக்கான உறுதியான காரணம்  இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தொடர் பயண களைப்பினால் தான் அவர் நோய் வாய்ப் பட்டிருக்கலாம் என பொதுவில் பேசப்பட்டு வருகின்றது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker