Latestமலேசியா

மிகப் பெரிய சிகரெட் கடத்தல் முறியடிப்பு!

ரொம்பின், ஜூன் 20 – இவ்வாண்டின் மிகப் பெரிய சிகரெட் கடத்தல் நடவடிக்கையைப் கடல்துறைப் போலீசார் முறியடித்துள்ளனர். இன்று காலை லெபான் சோன்டோங் எனும் இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில்  38 லட்சம் ரிங்கிட் பெறுமான 279,000 சிகரெட் கார்ட்டன் பெட்டிகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜாலான் லெபான் சோன்டோங்கிலிருந்து முவாட்சாம் ஷாவுக்கு காலை 2 மணியளவில் சென்று கொண்டிருந்த 5 டன் கொண்ட 3 லோரிகளைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அதில் 15 லட்சம் வரி செலுத்தக்கூடிய 38 லட்சம் பெறுமான கடத்தல் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

அண்டை நாட்டிலிருந்து படகின் மூலம் அந்தச் சிகரெட்டுகள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது. கடத்தலில் ஈடுபட்ட 20லிருந்து 50 வயதான 3 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அது பற்றிக்  கடல்துறை  போலீஸ் தலைவர் முகமட் யூசோப் கூறும்போது, அம்மாதிரியான கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் பல லோரிகள் தயார் நிலையில் இருப்பதாகவும்,  அந்த சிகரெட்டுகள் கோலாலம்பூர், பகாங் மற்றும் கிளந்தானுக்கு அனுப்பிவைக்கப் படவிருப்பதாகத் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker