Latestமலேசியா

மீனவர் கடத்தல் – 8 பேர் மீது விசாரணை

கோலாலம்பூர், ஜூன் 20 – லாஹாட் டத்து பெல்டா கடலில் 10 பாஜாவ் கடல் மீனவர்களைக் கடத்திய குற்றத்தின் பேரில் 8 பேர் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 6 பேர் 17லிருந்து 60 வயதுடைய அந்நிய நாட்டவர்கள் என புலனாய்வு  இயக்குனர் ஹுஸிர் முகமட் தெரிவித்தார். படகின் சொந்தக்காரரும் படகைச் செலுத்தியவரும் உள்ளூர்க்காரர்களாவர்.

அந்தப் பகுதியில் ஊரடங்கு விதிக்கப் பட்டிருப்பதால், படகு அதிகாலை வேளையில் அங்கிருக்க வேண்டிய அவசியம் இல்லை என போலீஸ் தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம்,  செம்போர்னாவுக்குச் செல்லும் வழியில்  காலை 2 மணியளவில் அபு சய்யாப் ஆயுதமேந்திய கடத்தல் கும்பலால் 10 மீனவர்கள் கடத்தப்பட்டனர். கடத்தபட்டவர்களுக்கு எவ்வித அடையாள ஆவணமும் இல்லை என தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker