Latestமலேசியா

ஹாஸிக்கிற்கு பிகேஆரின் காரணம் கோரும் கடிதம் – அன்வார்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 20 – பாலியல் ஆபாச வீடியோ சம்பந்தமாக சாந்துபோங் இளைஞர் பிரிவுத் தலைவர் ஹாஸிக் அப்துல்லா அப்துல் அஸீஸுக்கு பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கைக் குழு காரணம் கோரும் கடிதத்தை  அனுப்பும் என கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அது பற்றி ஒழுங்கு நடவடிக்கைக் குழு  4 பரிந்துரைகளை முன்வைத்ததாகவும் அதில் காரணம் கோரும் கடிதமும் அடங்கும். ஞாயிற்றுக்கிழமை கூடிய கூட்டத்தில் அந்த முடிவே ஏகமனதாக எடுக்கப்பட்டது.

கட்சியின் பெயருக்கு இழுக்கைக் கொண்டு வந்துள்ளதோடு அது பற்றி அறிக்கையை வெளியிட்டு  மேலும் கெட்டப் பெயரை ஏற்படுத்தியுள்ளார்.

இதனிடையே, வீடியோ பற்றி அஸ்மின் மறுப்பும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டதாகவும் அதனை சீர்தூக்கிப் பார்த்து மேலும் என்ன செய்யலாம் என தீர்மானிக்கப்படும்.

இதனிடையே, உதவித் தலைவர் ஷுரைடா கமாருடின், ஹாஸிக்கை கட்சியிலிருந்து நீக்க தாம் பரிந்துரைக்கப் போவதாகத் தெரிவித்தார். ஜூன் 12ஆம் தேதி பாலியல் வீடியோவில் இருப்பது தாம் என்றும், இன்னொரு நபர் அஸ்மின் அலி என்றும் ஹாஸிக்  அஸிஸ் சாதித்து வருகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker