Latestமலேசியா

2019- செந்தூல் பெருவிழாவில் கல்வி பிரச்சார நிகழ்வு ! 40 பயிற்சி-ஆலோசனை பட்டறைகள்

செந்தூல், ஜூன்.20- வறுமைக் கோட்டின் விழும்பில் உள்ளவர்கள் மத்தியில் கல்வியின் அவசியம் – அதன் ஆற்றல் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்த செந்தூல் வட்டாரத்தில் சுமார் 20 வருடங்களாக இயங்கி வரும் “Dignity for children foundation” எனும் அரசு சாரா இயக்கம்  “அனைவருக்குமான கல்வி” (Education for all) எனும் பிரச்சார நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் 10-11, 17-18 ஆகிய நாட்களில் நடைபெறும் 2019 செந்தூல் பெருவிழாவில் இந்த பிரச்சார நிகழ்வுகளும் இடம் பெறும். இதில் இரு பாலரும் ஈடுபடக்கூடிய தொழிற்கல்வி – வர்த்தக- தொழில் தொடர்பு திட்டங்கள், பெண்களுக்கான தனி நபர் பாதுகாப்பு , பணி விண்ணப்பத்திற்கு தேவைப்படும் முறையான தகவல் ஆவணம் (Resume) தயாரிக்கும் வழிமுறைகள் என பல அம்சங்களுக்கு சுமார் 40 பயிற்சி மற்றும் ஆலோசனை பட்டறை வழங்கப்படும். இந்த பிரச்சார நிகழ்விற்கு பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் அதரவு நல்கியுள்ளது

அவ்வகையில் இந்த பிரச்சார நிகழ்வின் அறிமுக விழா இன்று இந்த இயக்கத்தின் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், இயக்கத்தின் அறங்காவலர் குழு தலைவர் ஜேம்ஸ் லிங் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை அறிமுகம் செய்து இது குறித்து விளக்கம் அளித்தனர்.

இந்த பிரச்சார நிகழ்வில் மக்களுக்கு பயனளிக்கக் கூடிய பல அம்சங்களுக்கு பட்டறை நடத்தப்படுகின்றன. இதன் வழி பொதுமக்கள் குறிப்பாக பி40 பிரிவைச் சேநர்ந்தவர்கள் பெரும் பயன் அடையலாம் என பிரபகரன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஜேம்ஸ் லிங், வாழ்வில் முன்னேற கல்வி ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் என்பதனை எங்கள் இயக்கம் முழுமையாக நம்புகின்றது.  வறுமையை எதிர் கொள்ள கல்வியை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தலாம். எனவே வறுமை  கோட்டில் உள்ளவர்கள் அதிலிருந்து மீள வழி வகுக்கும் வகையில் நாங்கள் இந்த பட்டறையை நடத்துகின்றோம் என பேசினார்.

இந்த பிரச்சார நிகழ்வு குறித்து தகவல் அறிய விரும்புவர்கள் 03- 40441397 என்ற எண்கலை தொடர்பு கொள்வதோடு dignitychildren.org, www.sentulfestival.com என்ற அகப்பக்கங்களையும் வலம் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker