Latestமலேசியா

MH 17 விமான விபத்து: விசாரணைக் குழுவின் முடிவை மலேசியா ஏற்கிறது!- ஹனாபியா

கோலாலம்பூர், ஜூன். 20- மலேசிய பயணிகள் விமானமான MH17 விமானம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான அனைத்துலக கூட்டு விசாரணைக் குழுவின் முடிவுக்கு மலேசியா கட்டுப்படும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.

ஜே.ஜே.டி. எனப்படும் அனைத்துலக கூட்டு விசாரணைக் குழுவில் ஓர் உறுப்பினரான மலேசிய தலைமை வழக்கறிஞர் முகமட் ஹனனாபியா ஸ்க்காரியா, இது பற்றி கருத்து கூறிய போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்வதில் விசாரணை குழுவினர் எடுத்திருக்கும் முடிவில் அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருந்து வரும் என்று தெரிவித்திருக்கிறார்.

எம் எச் 17 தொடர்பான விரிவான விசாரணைகள் மற்றும் கண்டுபிடிப்பு ஆதாரங்கள் ஆகியவை புலனாய்வின் அடிப்படையில் அமைந்தவை என்பதை குழுவின் உறுப்பினர் என்ற முறையில் தாம் வலியுறுத்துவதாக அவர் சொன்னார்.

அனைத்துலக கூட்டுக்குழு விசாரணை குழுவின் முதன்மை நோக்கம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு தேவையான வகையில் விசாரணைகளை நடத்தி சாட்சியங்கள் மற்றும் இதர தடயங்களை சேகரிப்பதுதான் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

சட்ட விதிமுறைகள் மற்றும் முறையான செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை அமைய வேண்டும் என்பதுதான் மலேசியாவில் நிலைப்பாடு. எனவே கூட்டு விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகளுக்கு நாங்கள் உடன்படுகிறோம் என்று நெதர்லாந்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

அனைத்துலக குறித்து விசாரணை குழுவின் முடிவில் நான்கு சந்தேகப் பேர்வழிகளை அதை அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களில் ஒருவர் ரஷ்ய பாதுகாப்பு துறை சார்ந்தவர். மற்ற இருவர் ரஷ்யாவின் உளவுத் துறையை சேர்ந்த இரு அதிகாரிகள். நான்காவது நபர் உக்ரேய்னின் முன்னாள் இராணுவ தளபதிகளில் ஒருவராவார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நகரில் இருந்து கோலாலம்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்த எம் எச்17 விமானம், உக்ரேய்ன் வான் வெளி பகுதியில் பறந்து கொண்டிருந்த போது சுட்டு வீழ்த்தப்பட்டது.

மொத்தம் 298 பேர் மாண்டனர். இவர்களில் பெரும்பாலோர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker