Latestமலேசியா

அஸ்மினி அரசியல் செயலாளர்- 3ஆவது முறை போலீஸ் வாக்குமூலம்!

கோலாலம்பூர், ஜூன்.21- பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்தி பகிரப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பாக அவரின் அரசியல் செயலாளர் முகமட் ஹில்மான் இட்ஹாம் இன்று காவல் துறையிடம் மூன்றாவது முறையாக வாக்கு மூலம் அளித்தார்.

அவர் வாக்கு மூலம் அளிக்க இன்று காலை 10 மணியளவில் தனது வழக்கறிஞர் முகமட் ஹாஃபிஸ் உடன் புக்கிட்  அமான் காவல் தலைமையகத்திற்கு வந்தார்.

வாக்கு மூலம் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முகமட் ஹில்மான், அக்காணொளி  தொடர்பில் நான் கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று  புத்ரா ஜெயா காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தேன். அதன் அடிப்படையில் காவல் துறையினர் எனது வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இதோடு நான் மூன்றாவது முறையாக வாக்கு மூலம் வழங்கி விட்டேன். என்னுடன் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரியும் இக்காணொளி தொடர்பில் தங்களின் வாக்கு மூலத்தை வழங்கினார். இவ்விவகாரத்தில் நான் காவல் துணையுடன் இணைந்து செயல்ப்படுவேன் என குறிப்பிட்டு சென்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker