Latestஉலகம்

ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது -டிரம்ப்

வாஷிங்டன், ஜூன்’. 21- ஈரானை எச்சரிக்கும் விதமாக தனது டுவிட்டரில் செய்தி ஒன்றினை அமெரிக்க அதிபர் டொனால்டு டிராம்ப பதிவிட்டுள்ளார். ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர் மஸ்தான் என்ற பிராந்தியத்துக்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் அனைத்துலக எல்லையில்தான் பறந்தது .அதை வேண்டுமென்றே ஈரான் அரசு சுட்டு வீழ்த்தியது என குற்றம் சாட்டியது.

இந்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது . ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் தம்முடைய டுவிட்டரில் ஈரானுக்கு எச்சரிகை செய்துள்ளார். அதில் ஈரான் மிகப்பெரிய தவறு செய்து விட்டது என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார் .அமெரிக்க அதிபரின் இந்த டேவிட் ஆயுத பலம் மிக்க அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker