Latestமலேசியா

எம்.ஏ.சி.சி முடக்கியது “சுத்தமான கட்சி நிதி” – அம்னோ தகவல்

கோலாலம்பூர், ஜூன்.21- 1எம்டிபி குழுமத்திடமிருந்து அம்னோவிற்கு வழங்கப்பட்ட நிதி அனைத்தும் பயன்படுத்தப் பட்டு விட்டது. தற்பொழுது ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியுள்ளது “சுத்தமான கட்சி நிதி” என அம்னோவின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாசான் தெரிவித்தார்.

முன்னதாக 1எம்டிபி குழுமத்தில்  மோசடி செய்யப்பட்ட 27 கோடி  ரிங்கிட்டை மீட்க 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வழக்கு தொடுத்துள்ளது. அந்த பெயர் பட்டியலை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் லத்தீப்பா கோயா இன்று வெளியிட்டார். அப்பட்டியலில் சில அம்னோ தொகுதிகளின் பெயர்களும் அக்கட்சியை சேர்ந்த சிலரின் பெயர்களும் இருந்தன.

இந்நிலையில் ஊழல் தடுப்பு ஆணையம் தற்பொழுது முடக்கியுள்ள அம்னோ வங்கி கணக்கில் உள்ள பணம் கட்சியின் தேசிய நிதியாகும். 1எம்டிபி குழுமத்திடமிருந்து பெற்ற பணம் மொத்தமும் முன்பே செலவு செய்யப்பட்டு விட்டது. எனவே, அவர்கள் முடக்கியுள்ள பணத்தை திரும்பக் கோர எங்களுக்கு முழு உரிமை உண்டு. இது தொடர்பில் ஆணையத்திற்கு நாங்கள் ஏற்கெனவே கடிதம் அனுப்பி உள்ளோம் என அவர் விவரித்தார்.

மேலும் நான் தற்பொழுது கட்சியின் தேசிய நிதியை தான் கோருகின்றேன். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கட்சியின் சில தொகுதிகள் குறித்து நான் பேசவில்லை. தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் டத்தோஶ்ரீ முகமட் ஹாசான் தெளிவுப்படுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker