Latestமலேசியா

துணைப் பிரதமர் பதவி: மாற்றம் தேவையில்லை; பிரதமரின் முடிவை ஏற்கிறேன்! -அன்வார்

கோலாலம்பூர், ஜூன்.21- துணைப்பிரதமர் பதவிக்கு ஆள் மாற்றம் தற்பொழுது தேவை இல்லை எனும் பிரதமரின் நிலைபாட்டினை தாம் ஏற்பதாக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

முன்னதாக அன்வார் பிரதமர் பதவியை ஏற்பதற்கு இலகுவாக முதலில் அவருக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க வேண்டும் என ஜெராம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஷாஉட் ரொஸ்லி கருத்துரைத்திருந்தார். மேலும் பிரதமர் பதவியிலிருந்து துன் மகாதீர் கீழிறங்க வேண்டும் என அன்வாருக்கு பெரும் ஆதரவு வழங்கி வரும் “ஓதாய் ரீபோர்மிஸ்” (Otai Reformis) அமைப்பு வலுயுறுத்தியுள்ளது.

இதனையடுத்து எனது கணவர் டத்தோஶ்ரீ அன்வார் பிரதமர் பதவி ஏற்கும் செயல்பாட்டினை முன் நகர்த்தும் வகையில் நான் எனது துணைப்பிரதமர் பதவியை அவருக்கு விட்டு கொடுக்கவுள்ளேன் என்ற தகவல் முற்றிலும் பொய் என துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஜிஸாவும் தெளிவுப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து நேற்று இந்த கேள்வி பிரமரிடமும் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், துணைப்பிரதமர் பதவி மாற்றம் குறித்து முன்மொழிய அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அது குறித்து நான் முடிவெடுப்பது என்பது வேறு என சூசகமாக குறிப்பிட்டுருந்தார்.

இந்நிலையில் நேற்று பிரதமர் தாய்லாந்திற்கு செல்லும் முன் டத்தோஶ்ரீ அன்வார் அவரை சந்தித்தார். அந்த சந்திப்பில் நாட்டின் முன்னேற்றம் குறித்து பல விவாகரங்களை நாங்கள் விவாதித்தோம். குறிப்பாக துணைப் பிரதமர் பதவியிலும் அமைச்சரவையிலும் மாற்றம் இப்பொழுது அவசியமாகாது.

இதற்கிடையே இந்த சந்திப்பில் நாங்கள் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஒரின சேர்க்கை உறவு காணொளி விவகாரம் குறித்தும் பேசினோம்.

தேவையற்ற அவதூறுகளை பரப்பி விடும் தரை குறைவான அரசியல் விளையாட்டினை நானும் பிகேஆர் கட்சியினரும் ஒரு போதும் ஏற்க மாட்டோம். அஸ்மின், அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்கள் என போர்ட்டிக்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker