Latestமலேசியா

பூர்வக் குடிகளுக்கு மிருகங்களை விட கொஞ்சம் மேம்பட்ட சிகிச்சையா? விசாரிப்போம்! -அமைச்சர்

கோலாலம்பூர், ஜூன்.21- மிருகங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விட கொஞ்சம் தான் கூடுதலாக சிகிச்சையே அளிக்கப்பட்டது என்ற அடிப்படையில் குவா மூசாங்கிலுள்ள பாதெக் பூர்வகுடிமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து சுகாதார அமைச்சு விரிவாக விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூர்வக் குடிமக்களுக்கு சிகிச்சை அளித்த தாதியர்கள், தங்களின் சமூக சுகாதார வருகைகளின் போது அந்த மக்களை மிகவும் ஏளனத்துடன் நடத்தினர் என்று கூறப்படுகிறது.

மேலும் அவர்களைக் கேலி செய்து, செய்து கிண்டல் செய்து, சிகிச்சை அளிப்பதில் கடுகடுப்பு போக்குடன் அந்த தாதியர்கள் நடந்து கொண்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு இருப்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஷுல்கிப்ளி அகமட் கருத்துரைத்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும். இது மிகவும் கடுமையான ஒரு குற்றச்சாட்டுகள். இதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்க வேண்டும். எனவே, முழுமையான அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.

இருப்பினும், இந்தப் புகார்கள் இன்னும் குற்றச்சாட்டுகள் என்ற அடிப்படையிலேயே உள்ளன. எனவே குற்றச்சாட்டுக்கள் என்ற அடிப்படையில்தான் அவற்றை பார்க்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தப் பூர்வக் குடிமக்கள் சுகாதார அதிகாரிகளை அதிகம் நம்பவில்லை. ஏனெனில், அவர்கள் விலங்குகளுக்கு அளிப்பதை விட சற்று கூடுதலான அடிப்படையில் தான் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள் என்று பூர்வக்குடிகள் குறைபட்டுக் கொள்வதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

தாதியர்கள் இந்த பகுதிக்கு வரும் போதெல்லாம் அந்த பூர்வக்குடி மக்களை பார்த்து கேலி செய்வதும் கிண்டல் செய்வதும் வழக்கமாக இருந்தது. இதனால் அவர்களை பூர்வக்குடிகள் நம்புவதக் கைவிட்டனர். பூர்வக்குடி மக்களிடையே குறைந்த எண்ணிக்கையிலான வர்களே தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருப்பதற்கு இதுதான் காரணம் என்று கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker