Latestமலேசியா

முதியோர் இல்லக் கொடுமை: சமூக நல இலாகா மூடவுள்ளது!

சிரம்பான், ஜூன்.21- இங்குள்ள முதியோர் இல்லம் ஒன்றில் வசிப்பவர்கள்  கொடுமைப் படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில சமூக நல இலாகா அந்த இல்லத்தை மூடவுள்ளது. இத்தகவலை அம்மாநில மகளிர், குடும்ப, சமூக நல விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் நிகோல் தான் லீ கூன் தெரிவித்தார்.

முன்னதாக அந்த முதியோர் இல்லத்தில் உள்ள வயதினோரை பெண் பாதுகாவலர் ஒருவர் கொடுமைப்படுத்தி வருகின்றார்.  அங்குள்ளவர்களுக்கு முறையாக உணவு அளிக்கப் படுவதில்லை. மாறாக  நீண்ட நேரம் தங்களின் அறையில் பூட்டி வைக்கப் படுகின்றனர். மேலும் அவர்களில் சிலரை சிறுநீர் அருத்த வைத்தும் துன்புறுத்தி உள்ளனர். அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டதை விட அதிக அளவில் தூக்க மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன.

இதற்கிடையே சமீபத்தில் இந்த இல்லத்தில் வசித்து வந்த 16 பேர் அடுத்தடுத்து மரணமடைந்து உள்ளனர். வயது முதுமை காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளனது என ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என நபர் ஒருவர் சமூக வலைத் தளத்தில் காணொளியுடன் பதிவேற்றம் செய்தார்.

இந்த பதிவேற்றம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரின் உறவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் மாநில சமூக நல இலாகாவினர் அவ்வில்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த இல்லத்தில்  முதியவர்கள் கொடுமைப் படுத்தப்படுவது உண்மை தான் என அதன் முன்னாள் பணியாளர்கள் சிலரும் தகவல் வழங்கினர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 17ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் மாநில சமூக நல இலாக அந்த இல்லத்தை சட்ட விதி 506 இன் படி குறிப்பிட்ட காலத்திற்கு (ஆணை வரும் வரை) மூடவுள்ளது என அவர் நேற்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே கடந்த 2017- 2018ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தனது 90 வயது பாட்டிக்கு இந்த இல்லத்தில் கொடுமை இழைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் புகார் அளித்த போதிலும் சமூக நல இலாகா அதன் விசாரணையை நியாயமாக நடத்தவில்லை என பெண்மணி ஒருவர் தற்பொழுது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டினை மறுத்த நிகோல், அவ்விவகாரம் தொடர்பில் கடந்த வருடம் நவம்பர் 18ஆம் தேதி புகார் கிடைக்கப் பெற்றது. 1993 ஆதரவற்றோர் இல்ல சட்டத்தின் கீழ் அந்த புகார் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணை முடிவுகள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக புகார்தாரரிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெளிவுப்படுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker