Latestமலேசியா

1எம்டிபியின் பணத்தைப் பெற்றுக் கொண்டோர் பட்டியல் – எம்ஏசிசி வெளியிட்டது

கோலாலம்பூர், ஜூன் 21 –  நாஸா குவெஸ்ட், ஜேக்கல் ஜவுளி நிலையம், பிரபல ஹபிப் நகைக் கடை ஆகியவை 1எம்டிபியின் சட்டவிரோதப் பணத்தைப் பெற்றதாக  ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1எம்டிபியின் 27 கோடி ரிங்கிட் நஜிப் ரசாக்கின் வங்கிக் கணக்கில் இருந்து  41 அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எம்ஏசிசி தெரிவித்துள்ளது.

அதில் 78 விழுக்காட்டு, 21.2 கோடி ரிங்கிட் நஜிப் ரசாக் சார்ந்த அம்னோவுக்குச் சென்றுள்ளது. அதில், 7 தனிப்பட்ட நபர்கள், 3 அரசு சாரா இயக்கங்கள், 5 அறக்கட்டளைகள், 12 நிறுவனங்கள், அம்னோ தலைமையகம், கிளந்தான், சிலாங்கூர், கெடா, ஜோகூர், சபா, பகாங், பெக்கான், ஜோகூர்  பாரு அம்னோ பிரிவுகளோடு மசீச மகளிர் பகுதி, பகாங் மசீச, எஸ்யுபிபி, எல்டிபி, பார்ட்டி பெர்சத்து ராயாட் சபா ஆகியவையும் நிதி பெற்ற பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker