Latestமலேசியா

1எம்டிபி: ரிங். 27 கோடி மோசடி! – 41 பேர் மீது வழக்கு

புத்ரா ஜெயா, ஜூன் 21 –  1எம்டிபியில் மோசடி செய்யப்பட்ட 27 கோடி  ரிங்கிட்டை மீட்க 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) வழக்கு தொடுத்துள்ளது.

அந்த வழக்குகள் 2001ஆம் ஆண்டு பண மோசடி, தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்தல், சட்டவிரோத நடவடிக்கையில் வருமானத் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகத் தலைமை ஆணையர் லத்தீபா கோயா  தெரிவித்தார்.

41 தனிநபர்களுக்கும் சமூக  அமைப்புகளுக்கும் விநியோகிக்கப்பட்ட பணமானது முன்னாள் பிரதமரின் சொந்த வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தப் பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது என  லத்தீபா தெரிவித்தார்.

அதில் 21.2 கோடி ரிங்கிட் அம்னோவுக்குச் செலுத்தப்பட்டதாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த அவர், அம்னோவைத் தவிர்த்து இதர அரசியல் கட்சிகள், அறக்கட்டளைகளும் நிறுவனங்களும் அடங்கும் என சுட்டிக்காடினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker