Latestமலேசியா

ஊராட்சி மன்ற உறுப்பினர் மீது ரோன்னி லியூ எம்ஏசிசியிடம் புகார்

புத்ரா ஜெயா, ஜூன் 22 – பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாளும் சீன நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றது மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த ஊராட்சி மன்ற உறுப்பினர் மீது ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ரோன்னி லியூ, பல முறை அந்த நிறுவனத்தின் மீது புகார் கொடுத்திருந்தும்  சிப்பாங் ஊராட்சி மன்றத் தலைவர் முகமட் பவுசி முகமட் யாத்திம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

அந்தத் தொழிற்சாலை காற்றுத் தூய்மைக் கேட்டை உருவாக்குவதாக சிப்பாங்,  சுங்கை பீலேக் மக்கள் போராட்டத்தை நடத்தியிருந்தனர் என ரோன்னி லியூ தெரிவித்தார்.

சிப்பாங் கவுன்சிலர்களின் பரிந்துரையை பவுசி நிராகரித்து,  அத்தொழிற்சாலையை முடக்க மறுத்துள்ளார்.

அந்தத் தொழிற்சாலையை முடக்க தாம் பவுசியிடம் பேசியதாகவும் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

அது பற்றிக் குறிப்பிட்ட பவுசி தாம் அரசு ஊழியர், ரோன்னி லியூ அரசியல்வாதி என்றும் அவரிடமிருந்து உத்தரவைப் பெற வேண்டிய அவசியம் தமக்கு  இல்லை.  அந்தத் தொழிற்சாலையின் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள நிர்வாகத்துக்கு  7 நாள் கெடு கொடுக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker