Latestமலேசியா

கடத்தப்பட்ட மீனவர்கள்: 9 பேர் மீட்பு, ஒருவர் மாயம்

கோத்தா கினபாலு, ஜூன் 22 – அபு சய்யாப் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட 10 கடல் நாடோடிகளில் 9 பேர் மீட்கப்பட்டதாகவும் ஒருவர் காணாமல் போய் இருப்பதாவும் தெரியவருகிறது.

அவர்கள் இன்று காலையில், ஜோலோ தீவில், தலிபாவோவில் உள்ள தோயாங் கிராமத்தில் மீட்கப்பட்டதாக பிலிப்பைன்ஸ் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

அந்த மீனவர்கள் சபா, லாஹாட் டத்து கடலில் அதிகாலை 2.20 மணியளவில் கடத்தப்பட்டனர். அவர்கள் பாஜாவ் லாவுட் அல்லது பெலாஹு என்றழைக்கப்படும் கடல் நாடோடிகளாவர்.

அதில் ஒருவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. பெரும்பாலும் பிணைப்பணத்துக்காகவே ஆள் கடத்தல் நடக்கும்போது,  அந்தக் கடல் நாடோடிகளிடம் எதனையும் பெற முடியாமல் போனதால், அவர்களைக் கடத்தல்காரர்கள்  கைவிட்டிருக்கலாம்  என நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker