Latestமலேசியா

சரியான விலை கிடைத்தால் – மாஸ் விற்கப்படலாம்! -மகாதீர்

கோலாலம்பூர், ஜூன் 22 – சரியான விலை கிடைக்குமானால் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் விற்க முடிவெடுக்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

நிறுவனத்தை நிலைநிறுத்த பல முறை அதன் தலைவர்கள் மாற்றப்பட்டனர். பல முறை அரசு நிதியைச் செலுத்தியது. . ஒவ்வொரு முறையும் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

அதனை நிலைநிறுத்த மேலும் பணத்தை முதலீடு செய்யலாம். தலைமையை மாற்றலாம் அல்லது நல்ல விலை கிடைத்தால் அதனை விற்கலாம் எனும் வாய்ப்புகள் இருக்கின்றன.

நிறுவனத்தை வாங்குவோரின் தகுதியை முதலில் ஆராய வேண்டும். அவர்களும் தோல்வி அடைந்தால், அதில் பயனேதும் இல்லை.

பேங்காக்கில் வெள்ளிக்கிழமையன்று புளூம்பர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மகாதீர் அவ்வாறு குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker