Latestஇந்தியா

வந்தவருக்கெல்லாம் வயிறாற உணவளித்த விஜயகாந்த் இன்று கடனாளி! ஏனிந்த நிலை?

சென்னை ,ஜூன். 22- தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனாகவும் அரசியல் களத்தில் அதிரடியாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த். அவரது சொத்துக்கள் ஏலத்திற்கு வந்திருப்பது அவரது தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது .

ஆனால் பாடுபட்டு சம்பாதித்த சொத்துக்கள் எதையுமே விஜயகாந்த் சுயமாக நிர்வகிக்கவில்லை . ஒரு காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு திரையுலகில் போட்டியாக விளங்கியவர் விஜயகாந்த். திரையுலகில் இவர் நடித்து வந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் திருமண மண்டபம், பொறியியல் கல்லூரி, விவசாயம் ,கேப்டன் டிவி ,என பல்வேறு தொழில்களிலும் விஜயகாந்த் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் இவை எதையுமே விஜயகாந்த் சுயமாக நிர்வாகி நிர்வகிக்கவில்லை.

திரைப்படம்  மூலமாக வரும் சம்பளப்பணம் முதல் பிற தொழில்கள் மூலமாக வரும் வருமானங்களை வரை அனைத்தையும் மனைவி பிரேமலதா தான் நிர்வகித்து வந்துள்ளார்.

பிரேமலதா அரசியலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த பிறகு அவரது சகோதரரும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் கணக்கு வழக்குகளை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் விஜயகாந்துக்கு ஆண்டாள்-அழகர் பொறியியல் கல்லூரி சொந்தமாக உள்ளது .

ஒரு காலத்தில் சிறப்பாக விளங்கிய தள்ளாடி வருகிறது .அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தினால் ஆண்டாள்-அழகர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறவே கிடையாது. இதனால் வருமானம் இல்லாத நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொத்துக்களை அடமானம் வைத்து 6 கோடி கடனாக பெற்று உள்ளன.

பிரேமலதா மற்றும் எல் கே சதிஷ் கல்லூரி மேம்பாடு என்று கூறி அந்தக் கடனை பெற்றனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கல்லூரியில் வருமானம் முன்னேற்றமும் இல்லை.

இதனால் ஐஓபி வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டும் அவ்வப்போது பிரேமலதா மற்றும் சுதீஷ் கட்டி வந்துள்ளனர்.  இதற்கிடையில் அரசியல் களத்தில் இருவரும் தீவிரமாக இறங்கியதால் ஆண்டாள்-அழகர் கல்லூரி மட்டுமில்லாமல், கேப்டன் டிவி ,உள்ளிட்ட பிற தொழில் நிறுவனங்களிலும் அவர்கள் இருவராலும் சரியாக கவனிக்க முடியவில்லை.

விஜயகாந்தின் ஆடிட்டரும் ஆண்டாள் அழகர் கல்லூரியின் மீதுள்ள கடன் குறித்து முதலில் சுதீஷ் மற்றும் பிரேமலதாவை எச்சரிக்கை இல்லை என்று சொல்லப்படுகிறது . கடைசி நேரத்தில்தான் கடன் மற்றும் அதற்கான வட்டி மழை போல் அவர்கள் முன் வந்து நின்றது.

ஆனால் பிரேமலதா இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் திடீரென. விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலம் விடுவதாக செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து அதிர வைத்துள்ளது ஐஓபி வங்கி நிர்வாகம். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேமலதா மற்றும் சுதீஷ் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார்கள்.

ஆனாலும் அவர்களின் இருவரின் அலட்சியம்தான் விஜயகாந்தின் சொத்துக்களை ஏலத்திற்கு வரும் அளவுக்கு நிலைமை மோசமானது காரணம் என்று கூறுகிறார்கள ஒரு காலத்தில் வீடு தேடி வரும் அனைவருக்கும் வயிறு நிறைய சாப்பாடு போட்டு வாழ்ந்து வந்த விஜயகாந்த், தற்போது அவரது மனைவி மற்றும் மைத்துனரால் அவமானப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று இணையத்தில் பலர் விமர்சித்து வருகிறார்கள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker