Latestமலேசியா

ஷாபிக்கு 3 மனைவிகள் இருப்பதால் – நிச்சயமாகத் திரும்பி வருவார்

புத்ரா ஜெயா, ஜூன் 22 – வழக்கறிஞர் டான்ஶ்ரீ முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு 3 மனைவிகள் இருப்பதால், ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அவர் வேறு எங்கும் செல்லாமல், நாட்டுக்குத் திரும்பி வருவார் என அவரின் வழக்கறிஞர் முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் வழக்கில் ஆஜராக வேண்டியிருப்பதால், அவரின் கடப்பிதழைப் பெற வேண்டிய மனு சம்பந்தமாக நடந்த விசாரணையில் அவர் அதனைத் தெரிவித்தார்.

ஷாபிக்கு ஆஜரான வழக்கறிஞர் ஹர்விந்தர்ஜிட் சிங், தமது கட்சிக்காரரின் மீது  9.5 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கு சுமத்தப்பட்ட பின்னர், 4 முறை அவர் வெளிநாடு சென்றிப்பதாகக் குறிப்பிட்டதோடு, அவர் நிச்சயமாக மலேசியாவுக்குத் திரும்பி வருவார் என உத்தரவாதம் அளித்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி அகமாடி அஸ்னாவி, ரோட்ஸாரியா பூஜாங் மற்றும் முகமட் ஸாபிடின் முகமட் டியா ஆகியோரடங்கி அமர்வு அவரின் கடப்பிதழை ஜூன் 24இல் இருந்து ஜூலை 1 வரை அளிக்க உத்தரவிட்டது.

ஷாபி அவசியமாக ஆஸ்திரேலியா செல்லவிருப்பதால் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாக தெரிவித்தனர். தமது வேலை முடிந்த பின்னர், ஜூலை 3இல் ஷாபி தமது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைப்பார் என ஹர்விந்தர்ஜிட் சிங்  தெரிவித்தார்.

ஷாபி, நஜிப் ரசாக்கிடமிருந்து 9.5மில்லியன் ரிங்கிட்டை சட்ட விரோதமாகப் பெற்றதாகவும் அதனை வருமான வரி வாரியத்தில் அறிவிக்காமல் தவிர்த்ததாவும்  அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் அனைத்துலகக் கடப்பிதழ் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது.

தமது கடப்பிதழைப் பெற அவர் செய்து கொண்ட விண்ணப்பதைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செக்கிரா, ஆஸ்திரேலிய நீதிமன்ற வழக்கில் அங்கிருக்கும் வழக்கறிஞர்களுக்கு அவர் உதவி செய்யவே செல்வதால்,  அவரின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகத் தீர்ப்பளித்திருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker