Latestமலேசியா

2 வயது பிள்ளையை வெந்நீரில் போட்டுக் கொன்ற தாய்!

மில்வாகீ , ஜூன்.22- தாய் ஒருவர் தான் பெற்றெடுத்த பிள்ளையை சுமார் 50 டிகிரி செல்சியஸ் கொண்ட வெந்நீரில் வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் விச்கோன்சின் மாநிலத்திலுள்ள மில்வாகீ பகுதியில் நடந்துள்ளது. இந்த கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட ஸயானா எனும் அந்த 2 வயது குழந்தை சிகிச்சை அளிக்கப்படாததால் இரண்டு நாட்களுக்கு பின் பரிதாபமாக உயிரிழந்தது.

இத்தகவலை சர்வதேச ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.  லிசா சிம்மோன்ஸ் (வயது 40) எனும் மாது தனது மகளை வெந்நீரில் வைத்து கொடுமைப்படுத்தியது மட்டுமில்லாமல் அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கும் கொண்டு செல்லவில்லை. இதனால் அக்குழந்தை வலியால் துடிதுடித்து இரண்டு நாட்களுக்கு பின் மரணமுற்றது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட லிசா, நீரின் வெப்பம் அறியாமல் தான் குழந்தையை சுமார் 1 நிமிடத்திற்கு வெந்நீரில் வைத்தேன் என விசாரணையில் கூறியுள்ளார்.

ஆனால் அக்குழந்தையின் உடலில் இருக்கும் காயத்தை அளவிடும் பொழுது சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக வெந்நீரில் இருந்திருக்கக் கூடும் என தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் அம்மாதுவிற்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அச்செய்தி உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker