Latestவாழ்க்கை

நீண்ட நேரம் கைப்பேசி பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்! -ஆய்வில் தகவல் !

கைப்பேசியை அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்தி வருவதால் தலையில் பின்புறம் கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .

இன்றைய காலக் கட்டத்தில் தகவல் பரிமாற்றம் என்பதையும் தாண்டி சமூக வலைத்தளங்கள், வங்கிப் பரிவர்த்தனை, கேம்ஸ் என பலவகை உபயோகங்களுக்காகவும் மொபைல் போனை பலரும் பயன்படுத்துகின்றனர்.

தொழில் சார்ந்த முதலீட்டு பொருளாகவே மொபைல் போன் இருக்கிறது. இதனால் கைப்பேசி இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.

குறிப்பாக, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தான் அதிகம். இளைஞர்கள் பெரும்பாலும் குனிந்தபடி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறாக குனிந்தபடி விவேக கைப்பேசியை நீண்ட தூரம் உபயோகிப்பவர்களுக்கு உடல் வடிவில் மாற்றம் ஏற்படுவது தொடங்கியிருப்பதாக ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்.

அதாவது நீண்ட நேரம் கைப்பேசியை உபயோகிப்பவர்களுக்கு தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து கூறுகையில் அதிக நேரம் குனிந்த படியும் மொபைல் போனில் பயன்படுத்துவதால் உடலின் முழு எடையையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்கிறது.

இதனால் தசைகள், தசை நார்கள் , நாண்கள் வளர்கின்றன. இதன் காரணமாக தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு வளர்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker