Latestசினிமா

பொன்னியின் செல்வன்: மணிரத்னத்தை முந்திய சௌந்தர்யா ரஜினி!

சென்னை, ஜூன். 23- கல்கியின் வரலாற்று காவியங்களில் ஒன்றான ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் முழுவீச்சில் இறங்கி உள்ளார். இப்படம் குறித்த அடுத்தடுத்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படி வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தியாக ஐஸ்வர்யா ராய் , அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி என பலர் நடைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை ஒரு தொடராக எடுக்க தயாராகி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா. உலக அளவில் பிரபலமான எம் எக்ஸ் பிளேயர் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

தற்போது இது குறித்த பணிகளை தொடங்கி விட்டதாகவும் இது  குறித்த முன்னேற்பாடுகளை அவ்வப்போது வெளியிட உள்ளதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

இதில் இந்த படத்தை படமாக எடுக்க இருந்த மணிரத்னத்தை முந்திக்கொண்டு வெப் சீரியல்ஸ் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் சௌந்தர்யா. இதற்கு பல ரசிகர்கள் சௌந்தர்யாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker