Latestமலேசியா

போலி மது: நச்சுக்கு 10 நாளில் 19பேர் பாதிப்பு!

கோலாலம்பூர், ஜூன். 23- கடந்த 10 நாட்களில் 19 பேர், போலி மது பானங்களை அருந்துவதால் மெத்தனோல் எனப்படும் நச்சு தன்மைக்கு கடந்த 10 நாட்களில் 19 பேர் பாதிக்கப்பட்டனர் என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

போலியான மதுபானங்களில் இத்தகையப் மெத்தனோல் நச்சுத் தன்மை இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  கிட்டத்தட்ட மூன்று வகையான மெத்தனோல் நச்சு தன்மைகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், கடந்த 10 நாட்களில் பினாங்கில் 8 பேரும் ஜோகூரில் அறுவரும் நெகிரி செம்பிலானில் ஐவரும் பாதிக்கப் பட்டனர் என்று சொன்னார்.

இந்த மெத்தனால் சம்பவங்களைத் தொடர்ந்து பெறப்பட்ட    பரிசோதனை மாதிரிகள் தற்போது ஆய்வில் உள்ளன.  இவற்றில் ஐவர் மெத்தனோல் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மெத்தனோல் பாதிப்பின் தன்மை அவரிடம் இருப்பதாக தலைமை இயக்குனர் நோர் ஹிசாம் தெரிவித்தார்.  இந்த சம்பவங்களை தொடர்ந்து பினாங்கு , ஜோகூர்மற்றும் நெகிரி செம்பினான் ஆகிய மாநிலங்களில் அமலாக்க அதிகாரிகள்தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பினாங்கில் சட்டவிரோதமாக செயல்பட்ட மதுபான தொழிற்சாலை ஒன்றின் சாதனங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜோகூரில் மூன்று இடங்களில் இருந்து  போலி மதுபானங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker