Latestமலேசியா

காதலியுடன் தகராறு – காதலியும் மகனும் முதியவரால் தாக்கப்பட்டனர்

ஜோர்ஜ் டவுன், ஜூ 24 –  தகராறின் காரணமாக 61 வயது முதியவர் தமது   காதலியையும் அவரின் மகனையும் கத்தியால் தாக்கியுள்ளார்.

சண்டையில் காதலியின் மகன் தலையிட்டதால் அவரும் காயமடைந்தார். அந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் ஆயர் ஈத்தாம்,பண்டார் பாருவில்  நடந்ததாக ஜோர்ஜ் டவுன் ஓசிபிடி சே ஸைமானி சே அவாங் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்தை அடைந்தபோது,  மாதுவும் அவரின் 21` வயது மகனும் இரத்த வெள்ளத்தில் கிடந்தது காணப்பட்டனர்.

தமது காதலி காலை 1.30க்கு வீடு திரும்பியதைக் கண்ட பின்னர், அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. சண்டை மூண்டபோது, மகன் குறுக்கிட்டதால், அவரும் கத்தியால் தாக்கப்பட்டார். மோதலில் அந்த முதியவரின் உடம்பிலும் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த அனைவரும் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அந்த வழக்கு குற்றவியல் சட்டம், பிரிவு 326இன் வழி விசாரிக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker