Latestவாழ்க்கை

கால்களை இழந்த ஆமைக்கு சக்கர நாற்காலி பொருத்திய மருத்துவர்கள் ! 

லூசியானா, ஜூன்.24-கால்களை இழந்த ஆமை ஒன்றுக்கு சக்கர நாற்காலி பொருத்தி அசத்தியுள்ளனர் மருத்துவர்கள். பெட்ரோ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆமைக்கு முதலில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து அந்த மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வரும் ஜிஞ்சர் கட்னெர் என்பவர் பொம்மை காரின் கால்களைக் கொண்டு கால்களை இழந்த ஆமைக்கு சக்கர நாற்காலி ஒன்றை உருவாக்கியுள்ளார். 

தற்போது சக்கர நாற்காலி பொருத்தப்பட்ட அந்த ஆமை வழக்கமான ஆமைகள் நகர்வதை விடவும் வேகமாக நகரும் வீடியோவை லூசியானா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. பலரையும் கவர்ந்து உள்ள இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker