Latestவாழ்க்கை

டேட்டிங்’-  காதலுக்காக அல்ல: இலவச உணவுக்காக! அம்பலமான ஆய்வு உண்மை!

லாஸேஞ்சலிஸ், ஜூன்.24-   இலவசமாக நல்ல உணவு கிடைக்கும் என்பதாலேயே 23 விழுக்காடு பெண்கள் ‘டேட்டிங்’ செய்வதாக ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.தெரிவித்தனர். இன்றைய இளைய தலைமுறையினர் இடையே ‘டேட்டிங்’ என்பது சாதாரணமான நிகழ்வாகி விட்டது.

டேட்டிங் செய்யும் பெண்கள் குறித்த ஆய்வினை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அஜூஷா பசிபிக் பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட பெண்களின் குணாதிசயங்கள் சார்ந்த ஆய்வு 820 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

அவர்களின் குணாதிசயம், பாலின பாகுபாடு குறித்த நம்பிக்கைகள் ,பிடித்தமான உணவு மற்றும் அதை உட்கொள்ளும் விதம் ,எடுத்துக் கொள்ளும் நேரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்த கேள்விகள் ஆய்வில் கலந்து பெண்களிடம் கேட்கப்பட்டன.

இவர்களில் 23 விழுக்காடு பெண்கள் இலவசமாக நல்ல உயர்தர உணவு கிடைக்கும் என்பதாலேயே டேட்டிங் போவதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக 357 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுக் கணிப்பில் 33 விழுக்காடு பெண்கள் நல்ல உயர்தர உணவு இலவசமாக கிடைக்கும் என்பதாலேயே டேட்டிங் செல்ல விரும்புவதாக ஒளிவு மறைவின்றி தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker