Latestமலேசியா

பாசீர் கூடாங் காற்றுத் தூய்மைக்கேடு – மேலும் ஐந்து பள்ளி மாணவர்கள் பாதிப்பு !

பாசீர் கூடாங், ஜூன்.24- இங்குள்ள மேலும் ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் காற்றுத் தூய்மைக்கேட்டினால் பாதிப்புற்றுள்ளனர்.

தஞ்சோங் புத்ரி ரெசோர்ட் இடைநிலைப்பள்ளி, பாசீர் பூத்தே  இடைநிலைப்பள்ளி, தாமான் பாசீர் ஆரம்பப்பள்ளி, மெகா ரியா இடைநிலைப்பள்ளி, பாசீர் கூடாங் 2 ஆரம்பப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று காலை 10 மணி தொடங்கி அவசர சிகிச்சை பிரிவினர் விரைந்துள்ளனர் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காற்று தூய்மைக்கேட்டினால் அப்பள்ளிகளில் மொத்தமாக 45 மாணவர்கள் குமட்டல், வாந்தி மற்றும் சுவாசப் பிரச்சனை போன்ற உபாதைகளை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயரும் என தெரிகின்றது.

இந்நிலையில் இம்மாணவர்கள் சிகிச்சைக்காக பாசீர் கூடாங் அருகில் உள்ள சுகதார நடவடிக்கை மையம், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் அச்செய்தியில் தகவல் உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker