Latestமலேசியா

‘அமி கேஜூ’ நகைக் கடைக் கொள்ளை கும்பல் தகர்ப்பு! தலைவன் பிடிபட்டான்!!

கோலாலம்பூர், ஜூன். 25- அண்மைய ரவாங் நகைக் கடை கொள்ளை உள்பட பல்வேறு நகைக்கடைகளில் கொள்ளையிட்டு வந்ததாக நம்பப்படும் ‘அமி கெஜு’ என்ற கொள்ளைக் கும்பல் போலீசாரால் தகர்க்கப்பட்டிருக்கிறது.

அதன் தலைவன் பிடிபட்டு விட்டான் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசிர் முகம்மட் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த இந்தக் கொள்ளைக் கும்பலின் தலைவனான 32 வயதுடைய நபரும் அவனுடைய சகோதரரும் நேற்று சுங்கை பீசியிலுள்ள ஒரு கேளிக்கை மையத்தில் கைது செய்யப்பட்டனர்.

அண்மையில் ரவாங் நகைக் கடையில் நடந்த கொள்ளை உள்பட இதர 3 நகைக் கடைகளிலும் மற்றுமொரு பாதுகாப்பு வேன் கொள்ளையிலும் இந்த கும்பல் சம்பந்தப் பட்டிருப்பதாக நம்பப்படுகிறது என்றார் அவர்.

அமி கேஜூ குண்டர் கும்பலில் மொத்தம் 40 முதல் 44 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 7 பேர் ஏற்கனவே சிறைச்சாலையில் உள்ளனர் என்று அவர் விளக்கினார்.

கைது செய்யப்பட்ட இந்த கொள்ளை கும்பலின் தலைவன் நீண்ட காலமாகவே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதோடு, இதற்கு முன்பு சிறைச்சாலையில் இருந்த காலத்தில் அங்கிருந்து தன்னுடைய குண்டர் கும்பலுக்கு பல்வேறு உறுப்பினர்களை இந்த நபர் திரட்டியதாக என டத்தோ ஹுசிர் முகம்மட் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker