Latestஉலகம்

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மீது ரயில் மோதல்! – 6 வீரர்கள் பலி!

கிளிநொச்சி, ஜூன். 25- கிளிநொச்சியில் இன்று பிற்பகலில் ரயில் பாதையை கடக்க முயன்ற கனரக வாகனத்தின் மீது ரயில் மோதியதில் வாகனத்தில் இருந்த 6 ராணுவ வீரர்கள் மாண்டனர் மேலும் நால்வர் படுகாயம் அடைந்தனர்.

இங்குள்ள ரயில் பாதை மற்றும் சாலை சந்திப்பில் சமிக்கை விளக்குகள் செயல்படவில்லை. மேலும் இந்த ரயில் பாதை – சாலைச் சந்திப்பில் வேறு வகையான பாதுகாப்பு முறைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராணுவ வீரர்களைச் சுமந்து கொண்டு வந்த கனரக வாகனம் ஒன்று, ரயில் பாதையை கடக்க முயன்ற வேளையில் கொழும்புவிலிருந்து அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த ரயில் அதன் மீது மோதியது .

சம்பந்தப்பட்ட ராணுவ வாகனம் மிகக் கடுமையாக சேதமடைந்தது. சம்பவ இடத்திலேயே  6 ராணுவ வீரர்கள் உடல் சிதைந்து உயிரிழந்தனர் படுகாயம் அடைந்தவர்கள் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ராணுவ வாகனம்- ரயில் மோதல் இவ்வட்டாரத்தில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker