Latestஇந்தியா

மகள் மதம் மாறியதால்-  இசைமழை பொழிந்த சுதா ரகுநாதனுக்கு  வசை மழை!

சென்னை ,ஜூன். 25 – பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் மகள் மாளவிகா வெளிநாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்கா கிறிஸ்துவரை திருமணம் செய்ய உள்ளதால் கர்நாடக கச்சேரிகளில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்கப் படக்கூடாது என்பது உட்பட பல்வேறு வகையில் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாளவிகாவுக்கும் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட மைக்கல் முர்பி என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது இது தொடர்பான திருமண பத்திரிக்கை சமூக வலைத்தளங்களில் வெளியானது முதலே சுதா ரகுநாதன் வசை தாக்கல் செய்யப்பட்டு வருகிறார்.

இவர் இனி கச்சேரிகளில் பாட அனுமதிக்கக்கூடாது என்று வலதுசாரி இந்துக்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 5 நாட்களாக இதுபோன்ற ஏச்சுக்களுக்கும் பேச்சுக்களுக்கும் சமூக வலைத்தளங்களில் சுதா ரகுநாதனுக்கு கொட்டிக்கிடக்கின்றன .

2018 ஆம் ஆண்டில் நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் ஓ.எஸ். அருண் ஆகியோர் கர்நாடக இசையில் கிறிஸ்தவ பாடல்களை பாடும் நிகழ்ச்சியில் பங்கேற்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது சுதா ரகுநாதனை குறி வைக்கப்பட்டு உள்ளார்.

சுதா ரகுநாதன் மற்றும் அவரது மகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறி விட்டதாகவும் இனிமேல் கிறிஸ்துவ பாடல்கள் பாடவே அனுமதிக்க வேண்டுமே தவிர கோயில்களில் நிகழ்ச்சிகளில் நடத்த விடக்கூடாது என குரல்கள் வலதுசாரி இந்து ஆதரவாளர்களிடமிருந்து எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இப்போது வலது சாரி தீவிரவாதிகளின்  வசை மழையில் தவிக்கிறார் சுதா ரகுநாதன்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker