Latestமலேசியா

மகாதீரை சந்தித்தார் அன்வார்: முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டன

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 25 – ஆகக் கடைசியான முக்கிய விவரங்கள் குறித்து பேச அன்வர் இப்ராஹிம், துன் மகாதீரைச் நேற்று சந்தித்தார்.

என்ன பேசினர் எனற விவரத்தைத் தெரிவிக்காமல், முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க விரைவான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை இருவரும் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாம் ஈராண்டுக்கு மேலும் பதவியில் இருக்கப் போவதாக மகாதீர் குறிப்பிட்டது பற்றி அந்தச் சந்திப்பில் பேசப்படவில்லை.

எனினும், அது பற்றி அவர் மகாதீரிடம் விவாதிப்பார் என சொல்லப்படுகிறது. மகாதீர் பதவியை எப்போது அன்வாரிடம் ஓப்படைப்பார் என்பது தற்போது பேசுப்படும் விஷயமாக உள்ளது.

93 வயதான மகாதீர் வாக்குறுதிக்கு இணங்க பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பது உறுதி என கூறிவருகிறார்.

அது பற்றி அன்வார் குறிப்பிடும்போது, பதவியை மாற்றித் தருவது ஏற்கெனவே ஒப்புக் கொண்ட ஒன்று என குறிப்பிட்டிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker