Latestஉலகம்

குளிப்பாட்டிய போது எஜமானரின் கழுத்தை நெறித்த வளர்ப்புப் பாம்பு

பாண்டோங்,  ஜூன் 25 – கடந்த வெள்ளிக்கிழமை செல்லப் பிராணியாக வளர்த்து வந்த மலைப்பாம்பு ஒன்று அதன் எஜமானர் குளிப்பாட்டி விடும் பொழுது அவரை இறுக்கிக் கொன்றது.

இறந்தவர் ஜானா (வயது 42) என அடையாளம் கூறப்பட்டது.  ஜானா செல்லப் பிராணியாக வளர்த்து வந்த 3 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பை வீட்டின் பின்புறம் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்போது, அவர் எதிர்பாராத சமயம் பார்த்து,  அவரை அந்தப் பாம்பு இறுக்கிக் கொன்றதாக ட்ரிப்யூன் நியூஸ் செய்தி  ஒன்று வெளியிட்டிருந்தது.

வீட்டின் பின்புறத்தில் இறந்து கிடந்த ஜானாவை அவருடைய மகன் கண்டுபிடித்ததாக ஜானாவின் மனைவி எலா (வயது 38) கூறினார். மேலும், 17 கிலோ கிராம்  எடையுள்ள அந்த மலைப்பாம்பு வீட்டின் பின்புறத்திலுள்ள நீர் ஓடையினுள் நுழைந்து விட்டதாகவும் எலா கூறினார்.

மேலும், மலைப்பாம்பை பொழுது போக்கிற்காக ஜனா வளர்த்து வந்தார் எனவும் மலைப்பாம்பைத் தவிர கருநாகங்களையும் அவர் வளர்த்து வந்ததாக எலா கூறினார். மேலும், அவர் அந்த கருநாகங்களை உணவாக உண்ணும் குடியிருப்புவாசிகளிடம் விற்று வந்ததாகவும் எலா கூறினார்.

தம்முடைய கணவர் பாம்பினால் இறக்க வேண்டுமென விதி இருந்தால்,  அதை தாம் ஏற்றுக்கொள்வதாக ஜானாவின் மனைவி எலா கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker