Latestஉலகம்

விமான பயணத்தில் தூங்கிய பெண் எழுந்த போது தனியாக இருந்தார் !

டோரோண்டோ, ஜூன். 25- விமான பயணத்தில் தூங்கிய பெண் ஒருவர் பின் எழுந்ததும் நிறுத்தி வைக்கப்பட்ட விமானத்தில் தனியாக இருந்ததை உணர்ந்து பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். இச்சம்பவம் கனடாவில் நிகழ்ந்துள்ளது.

டிப்பனி ஏடம்ஸ் எனும் அந்த பெண் கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று கியுபெக்கிலிருந்து டோரோண்டோவிற்கு ஏர் கனடா விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் பொழுது அவர் இருக்கையில் தூங்கியுள்ளார்.

ஆனால் பின் எழுந்து பார்க்கும் பொழுது அவர் அந்த விமானத்தில் தனியாக இருந்துள்ளார். அவரின் இருக்கை பட்டையையும் கழற்ற முடியவில்லை. அந்த விமானம் ஓர் இடத்தில் நிறுத்தி வைப்பட்டிருந்தது.

நேரம் நள்ளிரவை எட்டியதால் அங்கு இருட்டும் குளிரும் சூழ்ந்திருந்தது. இதனையடுத்து டிப்பனி உடனே தனது கைத் தொலைபேசி மூலம் தனது நண்பரை தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அழைப்பு தொடர்பு கிடைத்த சுமார் 1 நிமிடத்திற்குள் தொலைப்பேசியின் ‘சார்ஜ்’ தீர்ந்து விட்டது. அந்த விமானத்தில் மின்சாரம் இயங்காததால் அவரால் அத்தொலைபேசியை ‘சார்ஜ்’ செய்ய முடியவில்லை.

இறுதியாக விமானத்தில் உள்ள மின் விளக்கை எடுத்து ஜன்னலில் ஒளியேற்றி வெளியில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்த முற்பட்டுள்ளார். இந்த ஒளியை அங்குள்ள பயணப் பெட்டி வண்டி ஓட்டுனர் ஒருவர் கண்ட பிறகு டிப்பனியை மீட்கப்பட்டார்.

இத்தகவலை டிப்பனி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை ஏர் கனடா விமான நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

விமானத்திலிருந்து மீட்கப்பட்ட பின் அந்த விமான நிறுவனம் எனக்கு டாக்சி, தங்கு விடுதி சேவை வழங்க முற்பட்டது. ஆனால் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் எனக்குள் இருந்தது.

மேலும் அந்நிறுவனம் இச்சம்பவம் தொடர்பில் என்னை இருமுறை தொடர்பு கொண்டு விசாரித்தது மட்டுமின்றி மன்னிப்பும் கேட்கச் செய்தது என திப்பனி மேலும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று ஏர் கனாடா நிறுவனமும் கூறியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker