Latestமலேசியா

VIDEO- இளைய மாணவனை சரமாரியாக தாக்கும் மூத்த மாணவன்! ‘பகீர்’ காணொளியில் விபரீதம்!

கோலாலம்பூர்,ஜூன், 25- திரங்கானுவில் செத்யூ என்ற இடத்தில் உள்ள இடைநிலைப் பள்ளி வகுப்பில்  சக மூத்த மாணவனால் இளைய மாணவன் வம்புக்கு இழுக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த 14 வினாடி காணொளியில் 16 வயதுடைய மூத்த மாணவன் ஒருவன், ஆரம்பத்தில் 14 வயதுடைய மாணவனை வம்புக்கு இழுக்கும் காட்சியும் பின்னர் அந்த மாணவனை தாக்கும் காட்சி இடம் பெற்றிருக்கின்றன.

Setiu, Terengganu

Sekolah Menengah Guntung, Setiu, Terengganu欺负班上最矮小的School Bullying Case#PDRM

Posted by 我们是马来西亚人 We are Malaysians on Sunday, 23 June 2019

இளைய மாணவனைத் தொடர்ச்சியாக முகத்தில் மாறி மாறி குத்திய நிலையில், அந்த மாணவன் தன்னை தற்காத்துக்கொள்ள கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டு கதறும் காட்சி சமூக ஊடகத்தில் பரவியுள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்திய மூத்த மாணவனின் சக தோழன் தான் இந்தக் காணொளியை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய மாநில கல்வித்துறை இயக்குநர் ஷாஃபாருடின் அலி இது குறித்து போலீஸ் புகார் செய்யும் படி மாவட்ட கல்வி இலாகாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

எனினும் சம்பந்தப்பட்ட இரு மாணவர்களின் பெற்றோர்களும் தங்களுக்குள்ளேயே பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடிவு செய்துவிட்டதால் கல்வித்துறை போலீசில் புகார் செய்யவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து தாக்குதல் நடத்திய அந்த மூத்த மாணவன் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான்.மேலும் ஏழு மாணவர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவன் முகத்திலும் கைகளிலும் காயங்களுக்கு உள்ளானார் என்ற போதிலும்கந்தக் காயங்கள் அவ்வளவு கடுமையானவை அல்ல என்று கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker