Latestமலேசியா

அடிப் விசாரணை: அமைச்சு- இலாகாவை பிரதிநிதிக்க 4 புதிய வழக்கறிஞர்கள்!

ஷா ஆலம், ஜூன். 26-  தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரண விசாரணையில் வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு மற்றும் தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவைப் பிரதிநிதிக்க 4 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

சுஸானா அத்தான், மாஸ்லிபா அயோப், பாட்சிலாதுல் இஸ்மா, மற்றும்  அஃபிக் சைனால் அபிடின் ஆகியோரே அவர்களாவர்.

இதற்கு முன்னர் செயல்பட்ட வழக்கறிஞர் சாஸ்லின் மன்சோர் அடிப்பின் குடும்பத்துக்கு ஆஜரான வேளையில், யாஹ்யா ஓஸ்மான், கமருஸாமான்  வஹாப் மற் றும் அகமட் தவுபிக் பஹாரும் ஆகியோரும் தொடர்ந்து  செயல்படுவர்.

அந்த வழக்கில் சாட்சியமளித்த தடயவியல் பேராசிரியர் டாக்டர் ஷாரோம் அப்துல் வாஹிட்டை ஜூலை 3,4, 5ஆம் தேதிகளில் மீண்டும் விசாரிக்க நீதிபதி ரோஃபியா முகம்மட் அறிவித்தார்.

அந்த விசாரணையில் மேலும் விவரம் தெரிய வாகன சம்பந்தமான நிபுணர் 16,17ஆம் தேதிகளில் தமது சாட்சியத்தை அளிப்பார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker