Latestஇந்தியா

சீனாவில் இருந்து வெளியேறும்   நிறுவனங்கள்: வளைக்கும் இந்தியா!

புதுடில்லி,ஜூன்.26- சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் வர்த்தக மோதல் காரணமாக சீனாவில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறும் முடிவை எடுத்துள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சீனாவில் இருந்து வெளியேறும்  நிறுவனங்களை வளைத்துப் போடும் திட்டத்தில் இந்திய அரசு இறங்கியுள்ளது.

முன்னுரிமை வரி விகிதங்கள் , வரி விடுமுறை என பல சலுகைகளை அத்தகைய நிறுவனங்களுக்கு வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .இதுகுறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்கும் திட்டத்தின் முதல் கட்டமாக இந்த துறைகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது .

நுகர்வோர் சாதனங்கள், மின் வாகனங்கள் ,காலணிகள், பொம்மைகள் உள்ளிட்ட சில துறைகள் முடிவு செய்யப் பட்டுள்ளன .சுங்கவரி கிடைப்பதற்கு முயற்சிக்கும் நிறுவனங்களால் வியட்நாம் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரங்கள் பயன்அடைந்துள்ளன.

இந்தியாவும் இதை பின்பற்ற உள்ளது. சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுப்பது ஒருபுறம் இருக்க வர்த்தக மோதலை வேறு வழியிலும் பயன்படுத்தி மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவில் இருந்து பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வர்த்தக மோதல் காரணமாக இந்த ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அத்தகைய பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு எந்தெந்த பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யலாம் எனவும் ஆய்வு செய்து மத்திய அரசு 150க்கும் அதிகமான பொருட்களை ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker