Latestமலேசியா

பிரம்படி கொடுத்த ஆசிரியர்: தற்காத்த முன்னாள் மாணவர்

கோலாலம்பூர், ஜூன் 26 – ஆசிரியரைத் தரக்குறைவாகப் பேசிய மாணவியைப் பிரம்பால் அடித்த ஆசிரியரின் செயலை முன்னாள் மாணவர் ஒருவர் தற்காத்துப் பேசியுள்ளார்.

ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி மாணவரான அவர், மாணவியைப் பிரம்பால் அடித்த அந்த ஆசிரியர் மலாய் மொழியைப் போதிப்பதாகவும் சிறப்பாகப் போதிக்கும் அவர் மிகுந்த பொறுமைசாலி என புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் பிரம்படி கொடுத்தது அந்த மாணவிக்குப் பாடம் புகட்டவே என்றும் அது அந்த மாணவியின் எதிர்காலத்தில் படிப்பினையாக அமையும் என குறிப்பிட்டார்.

அந்த ஆசிரியரைத் தமக்கு 8 ஆண்டுகளாகத் தெரியும் என்றும் அவர் தமக்கு 5 ஆண்டுள் போதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் நல்லவர் என்றும் மாணவர்களை அடிப்பதைத் தவிர்த்தே வருவார். சில சமயம் அவர் அடித்தது தமக்கு படிப்பினையாகவும் தாம் பல்கலைக்கழகத்தில் பயிலுவது அவரால்தான் என்றும் சிவா என்.ஈஸ்வரன் என்ற முன்னாள் மாணவர் தமது முகநூலில் எழுதியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker