Latestஉலகம்

மின் படிகட்டில் சிக்கிய சிறுவனின் கால்சட்டை – உயிரைப் பறித்த துயரம்!

ராஞ்சி. 26 ஜுன் – கிழக்கு இந்தியாவில் ராஞ்சி எனும் இடத்தில் அமைந்துள்ள பேரங்காடி ஒன்றில் இயங்கும் படிக்கட்டில் கை வைக்கும் இடத்தின் நடுவில், காற்சட்டை மாட்டி, சிறுவன் ஒருவன் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நிகழும் முன்னதாக, அச்சிறுவன் (வயது 12) இயங்கும் படிக்கட்டில் சாய்ந்தவாறு விளையாடிக் கொண்டிருந்ததாகவும் “டைலி மேல்.கொ.யுகெ” போர்டல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கண்காணிப்பு காமிராவில் அச்சிறுவன் இயங்கிக் கொண்டிருந்த மின் படிகட்டில் விளையாடுவதை காண முடிந்தது.

சிறிது நேரம் கழித்து, அச்சிறுவனின் காற்சட்டை கை வைக்கும் இடத்தின் நடுவில் சிக்கியதோடு அவனது உடல் பின்னர் நகரும் படிக்கட்டியோடு இழுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட  அச்சிறுவன் இயங்கும் படிக்கட்டோடு ஒட்டிக்கொள்ள முயன்றான், ஆனால் தடுமாறி 15 மீட்டர் (50 அடி) உயரத்தில் இருந்து விழுந்து பரிதபமாக உயிர் இழந்தான். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அச்சிறுவனைக் காப்பாற்ற முயன்றனர் ஆனால் முடியவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker