Latestமலேசியா

மூச்சுத் திணறி ஒரு மாதக் குழந்தை மரணம்

இஸ்கான்டார் புத்ரி, ஜூன் 26 – கேலாங் பாத்தா, தாமான் நுசா பாயுவிலுள்ள இரட்டை  மாடி வீடொன்றின் அறையில் குப்புற வாக்கில்,  படுத்த நிலையில் ஒரு மாத கைக்குழந்தை இறந்து கிடக்கக் காணப்பட்டது.

நேற்று காலை 6 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், எரான் ஹிடாயாட் அப்துல்லா என்ற அக்குழந்தை இறந்து காணப்பட்டதை அக்குழந்தையின் தாயார் வேலை முடிந்து வீடி திரும்பிய போது உணர்ந்ததாகத் தெரிகிறது.

சம்பவத்தின் போது, சம்பந்தப்பட்ட குழந்தை வீட்டின் மேல் மாடி அறையிலும், அக்குழந்தையின் தந்தை வீட்டின் வரவேற்பு அறையிலும் உறங்கிக் கொண்டிருந்ததாக இஸ்காண்டார் புத்ரி காவல் துறை தலைவரான சுல்கைரி முக்தார் கூறினார்.

மேலும், வேலை முடிந்து வீடு திரும்பிய அக்குழந்தையின் தாய் குழந்தையைக் காண அறைக்குச் சென்றதாகவும்,  அப்போது  குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்ததையும் வாய் நீல நிறத்திலும் காணப்பட்டதையும் அவர் உணர்ந்தார்.

சற்றும் தாமதிக்காமல்  குழந்தையை கெலாங் பாத்தா கிளினிக்குக் கொண்டு சென்றதாகவும் அங்கு குழந்தை இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது என அவர்   கூறினார்.

சோதனையில் அக்குழந்தைக்கு எந்த ஒரு உடல் நிலை கோளாறும் இல்லை எனவும் அக்குழந்தையின் மீது காயங்கள் எதுவும் கண்டுப்பிடிக்கப்பட வில்லை என சுல்கைரி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker