Latestமலேசியா

விசா விவகாரத்தில் ஊழலா? உடனடியாக அமைச்சுக்கு புகார் செய்வோம்! -எம்ஏசிசி

கோலாலம்பூர், ஜூன்.26- வெளிநாட்டு விசா (வி.எல்.என்) விவகாரத்தில்  அமைப்பு – நடைமுறைகளில் முறைகேடுகள் குறித்த அறிகுறிகள் தென்படுமேயானால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) உடனடியாக உள்துறை அமைச்சகத்திற்கு புகாரைச் சமர்ப்பிக்கும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளிநாடு விசா முறையில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் மீது உள்துறை அமைச்சு தக்க நடவடிக்கை எடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆய்வு மற்றும் ஆலோசனை பிரிவு கூடிய விரைவில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பர்.

இன்று  செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடியின் வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட பின்னர் ஆணையத்தின் துணை ஆணையர் டத்தோஶ்ரீ அஸாம் பாகி  செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு விசா தொடர்பாக அல்ட்ரா கிரானா செண்ட். பெர்ஹாட் என்ற நிறுவனத்திடம் இருந்து 42 லட்சத்து 40,000 ரிங்கிட்டை ஸாஹிட் ஹமிடி லஞ்சமாக பெற்றார் என கூறப்படுகின்றது. இன்று அவர் மீது 7 புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker