Latestஉலகம்

இந்தியாவுக்கு ஆதரவளித்த பாகிஸ்தான்:- ஐ.நாவில் அதிசயம் 

நியூ யார்க் ,ஜூன் 27- ஐநா பாதுகாப்புச் சபையில் இடம் பெற இந்தியாவுக்கு பாகிஸ்தான் உட்பட 55 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

சர்ச்சைக்குரிய அனைத்துலக அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இயங்கி வருகிறது.

ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அல்லாத இடத்துக்கான இந்தியாவின் வேட்புமனுவை ஆப்கானிஸ்தான், பூடான், இந்தோனேசியா, ஈரான் ,ஜப்பான் குவைத்,கிர்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட 55 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அடுத்த இரண்டாண்டு காலம் அதாவது 2021 முதல் 2022 வரை பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அல்லாத 5 இடங்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் பெரும்பாலான நாடுகள் இந்தியாவின் மேற்கு வேட்புமனுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி வெற்றியாக பார்க்கப்படுகிறது்.

இந்நிலையில் இது குறித்து ஐநா நிரந்தரப் பிரதிநிதி சையத் அக்பருதீன் கூறும் போது இந்தியாவுக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker