Latestமலேசியா

காரைப் பூட்டி கைப்பேசியில் மூழ்கிய சிறுவன்! தாயார் பரிதவிப்பு! தீயணைப்பு வீரர்கள் மீட்பு

பாசீர் மாஸ், ஜூன்.27- காரில் தன் மகனை கைத் தொலைப் பேசியோடு விட்டுச் சென்ற தாயார், பிறகு காரை திறக்க  பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளார். கிளந்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் தற்பொழுது சமூக வலைத் தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

தாயார் ஒருவர் தனது மகனிடம் கைத்தொலைபேசி கொடுத்து காரில் விட்டுச் சென்றுள்ளார். பின் திரும்பி வந்து பார்க்கும் பொழுது சிறுவன் காரின் கதவுகளை உள்ளிருந்து தாளிட்டு பின் இருக்கையின் கீழ் அமர்ந்து அக்கைப்பேசியை பயன்படுத்தியுள்ளான்.

தாயார் கதவை திறக்க சொல்லி கேட்டதை அவன் கண்டு கொள்வதாக இல்லை. கைப்பேசியில் தனது முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளான். காரின் கதவுகளை திறக்க அம்மாது பல நிமிடங்களக முயற்சித்து வந்துள்ளார். கதவையும் ஜன்னலையும் பல முறை தட்டிய போதிலும் சிறுவன் கவனிக்கவில்லை.

கலக்கம் அடைந்த அந்த மாது தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளர். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், அக்காரின் கதவை திறந்து சிறுவனை மீட்டுள்ளனர். மேலும் கைப்பேசி பயன்படுத்தும் ஆர்வத்தில் மூழ்கியதால் அச்சிறுவன் கதவை திறக்க முற்படவில்லை என தெரியவந்துள்ளது

இச்சம்பவத்தை அச்சிறுவனின் தந்தை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் என கூறப்படுகின்றது.  இச்சம்பவம் குறித்து சமூக தள வாசிகள் அம்மாதுவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு கைப்பேசி கொடுப்பதே தவறு. அதிலும் காரில் தனியாக விட்டுச் செல்வது பெரும் தவறு என அவர்கள் கருத்துரைக்கின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker